அரசியலமைப்புச் சட்டத்துடன் மீண்டும் மோதிப்பார்க்கும் மைத்திரி!

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீண்டும் நாடாளுமன்றம், அரசாங்கத்துடன் அரசியலமைப்பு சட்ட மற்றும் அரசியலுடன் மோதலுக்குச் சென்றுள்ளார் என பெருநகர் மற்றும் மேல்மாகாண அமைச்சர் சம்பிக ரணவக்க தெரிவித்துள்ளார்.

ஜாதிக ஹெல உறுமய கட்சி காரியாலயத்தில் இன்று செய்தியாளர் சந்திப்பு இடம்பெற்றது. இதன்போது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமைச்சரவைக் கூட்டத்தை நடத்தாதது தொடர்பில் கேள்வி எழுப்பிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது தொடர்ந்தும் பேசிய அவர்,

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீண்டும் நாடாளுமன்றம், அரசாங்கத்துடன் அரசியலமைப்பு சட்ட மற்றும் அரசியலுடன் மோதலுக்குச் சென்றுள்ளார். நாடாளுமன்ற தெரிவுக்குழுவால் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளால் தேசிய பாதுகாப்பிற்கு சிக்கல்கள் ஏற்படுவதாகத் தெரிவித்து அதன் செயற்பாடுகள் நிறுத்தப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்து கொண்டு அமைச்சரவையைக் கூட்டாமல் இருக்கின்றார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த செயற்பாட்டின் மூலம் அரசாங்கத்தை அரசையும் இல்லாமல் செய்யும் வகையில் பொறுப்பற்று செயற்பட்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, சபாநாயகர் கரு ஜயசூரிய மற்றும் தெரிவுக்குழு உறுப்பினர்கள் இணைந்து இந்த வார இறுதிக்குள் அமைச்சரவை தொடர்பான சர்ச்சைக்கு தீர்வினை வழங்க முயற்சிக்க வேண்டும். அத்தோடு மீண்டும் 2018 ஒக்டோபர் அரசியல் ந‍ெருக்கடியைப் போன்று நாட்டில் ஏற்படுத்த ஜனாதிபதி முயற்சிக்கக் கூடாது.

கடந்த 2015 ஆம் ஆண்டு பல்வேறு எதிர்பார்ப்புக்களுடன் ஜனாதிபதிக்கு அதிகாரத்தை வழங்கிய மக்கள் அமைதியை பேணாது ஜனநாயகத்திற்கு எதிராக அணி திரள வேண்டும். அத்தோடு நாடாளுமன்ற உறுப்பினர்களும் கட்சி பேதமின்றி ஜனாதிபதியின் இந்த செயற்பாட்டுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் என்றார்.

Latest Offers