கிழக்கு மாகாண புதிய ஆளுநரை சந்தித்தார் அலி ஸாஹிர் மௌலான

Report Print Mubarak in அரசியல்

கிழக்கு மாகாணத்தின் புதிய ஆளுநர் ஷான் விஜேலால் டீ சில்வாவை நாடாளுனமன்ற உறுப்பினர் அலி ஸாஹிர் மௌலான சந்தித்துள்ளார்.

திருகோணமலையில் உள்ள ஆளுநர் அலுவலகத்தில் இன்று இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இதன்போது அலி ஸாஹிர் மௌலான தனது வாழ்த்துக்களை தெரிவித்ததோடு கிழக்கு மாகாணத்தின் இயல்பு, அபிவிருத்தி உட்பட பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடல்களை மேற்கொண்டிருந்தார்.