ரிசாத் தொடர்பில் விசேட நாடாளுமன்ற தெரிவுக்குழு எடுத்துள்ள முடிவு

Report Print Steephen Steephen in அரசியல்

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள விசேட நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் விசாரணையின் போது தேசிய பாதுகாப்பு தொடர்பான விடயங்கள் குறித்த தகவல்களை சேகரிக்க ஊடகங்களை அனுமதிப்பதில்லை என இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் பதில் தலைவர் கலாநிதி ஜயம்பதி விக்ரமரத்ன தலைமையில் குழுவின் உறுப்பினர்கள் கூடி விரிவாக கலந்துரையாடி இந்த முடிவை எடுத்துள்ளனர்.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக தொடர்ந்தும் குற்றம் சுமத்தப்பட்டு வரும் முன்னாள் அமைச்சர் ரிசார்ட் பதியுதீன், தெரிவுக்குழுவிற்கு வந்து சாட்சியமளிக்கும் வரை விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என்பதே அரசாங்கத்தின் நிலைப்பாடு.

ரிசார்ட் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை இன்னும் நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரலில் இருப்பதால், நாடாளுமன்ற தெரிவுக்குழு கட்டாயம் தொடர்ந்தும் இயங்க வேண்டும் என அரசாங்கம் கருதுகிறது.

விசேட நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் முழுமையான அதிகாரம் சபாநாயகருக்கு இருப்பதால், குழுவின் உறுப்பினர்கள் இன்று சபாநாயகர் கரு ஜயசூரியவை சந்தித்துள்ளனர்.

தெரிவுக்குழுவின் உறுப்பினர்கள் ஜனாதிபதியை சந்திப்பது தொடர்பாக இதுவரை இறுதி முடிவு எடுக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.