மாலைதீவு ஜனாதிபதியும் முழு அமைச்சரவையும் இலங்கை விஜயம்

Report Print Steephen Steephen in அரசியல்

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் அழைப்புக்கு அமைய மாலைதீவு ஜனாதிபதி இப்ராஹிம் மொஹமட் சோலி உட்பட அவரது அமைச்சரவை இலங்கைக்கு விஜயம் செய்து உள்ளது.

மாலைதீவு ஜனாதிபதி உட்பட முழு அமைச்சரவையும் இலங்கைக்கு விஜயம் செய்வது இதுவே முதல் முறை.

இதனை தவிர அமெரிக்க வெளிவிவகார ராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ அடுத்த வாரம் இலங்கைக்கு உத்தியோகபூர்வ பயணம் மேற்கொள்ள உள்ளார்.

அத்துடன் ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபேவின் விசேட பிரதிநிதியும் இலங்கை வரவுள்ளார்.

இவர்கள் அனைவரும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் கோரிக்கைக்கு அமையவே இலங்கை வருகின்றனர். நாட்டின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் அண்மையில் இலங்கையில் உள்ள வெளிநாட்டு தூதுவர்களை அழைத்து தெரிவித்திருந்தார்.

Latest Offers