நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட கஞ்சிபான இம்ரான்

Report Print Steephen Steephen in அரசியல்

கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பாதாள உலகக்குழு உறுப்பினர் கஞ்சிபான இம்ரான் உட்பட மூன்று சந்தேக நபர்கள் இன்று கொழும்பு மேலதிக நீதவான் காஞ்சனா நெரஞ்சலா டி சில்வா முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.

துபாயில் இருந்து நாடு கடத்தப்பட்ட நிலையில், கைது செய்யப்பட்ட கஞ்சிபான இம்ரான் 90 நாள் தடுப்பு காவல் உத்தரவின் பேரில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர். நீதிமன்ற உத்தரவுக்கு அமைய அவர்களை பொலிஸார் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர்.

கஞ்சிபான இம்ரான் என்ற மொஹமட் நசீம் மொஹமட் இம்ரான், மொஹமட் பௌஸ் மொஹமட் அஸ்லி, அபுபக்கர் மொஹமட் பதுர்தீன் ஆகியோரே நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.

சந்தேக நபர்களை எதிர்வரும் 26 ஆம் திகதி மற்றும் ஜூலை 7 ஆம் திகதியும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.