அமைச்சரவை கூட்டத்தை நடத்துவது ஜனாதிபதி மற்றும் பிரதமரின் பொறுப்பு

Report Print Steephen Steephen in அரசியல்

அமைச்சரவைக் கூட்டங்களை நடத்துவது ஜனாதிபதி மற்றும் பிரதமரின் பொறுப்பு என எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அமைச்சரவைக் கூட்டம் நேற்று நடத்தப்படாதது குறித்து செய்தியாளர் ஒருவர் இன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

உலகில் முதல் முறையாக ஜனாதிபதியும், பிரதமரும் இழுப்பறியில் ஈடுபட்டுள்ளனர். ஈஸ்டர் தாக்குதல் சம்பந்தமான நாடாளுமன்ற தெரிவுக்குழுவை ஜனாதிபதி எதிர்க்கின்றார்.

புலனாய்வு அதிகாரிகளின் தகவல்கள் வெளியிடப்படுவதால் அழிவு ஏற்படும். மில்லேனியம் சிட்டி பிரச்சினை காரணமாக புலனாய்வு அதிகாரிகள் கொலை செய்யப்பட்டனர்.

அதேவேளை முஸ்லிம் அமைச்சர்கள் பதவி விலகியதை தாம் எதிர்ப்பதாக, அவர்கள் தன்னை சந்தித்த போது நேரடியாக கூறியதாகவும் மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers