மஹிந்தவின் கருத்தை நூற்றுக்கு நூறு வீதம் ஆமோதிக்கும் முன்னாள் முதலமைச்சர்

Report Print Navoj in அரசியல்

நாட்டில் தற்போது தொடர்ந்து பெருகும் முரண்பாடுகளைக் தவிர்க்கவும், அரசியல் ஸ்தீரமற்ற நிலைமையை நீக்கவும் உடனே நாடாளுமன்றத்தைக் கலைத்து பொதுத் தேர்தலுக்குச் செல்ல அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதியும் எதிர்கட்சி தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்த கருத்தை நான் நூற்றுக்கு நூறு வீதம் ஆமோதிக்கிறேன் என கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நஸிர் அஹமட் குறிப்பிட்டுள்ளார்.

அவரது அக்கருத்தை நான் பத்திரிக்கையில் பார்த்தேன் அவரது இக்கருத்தை நான் நூற்றுக்கு நூறு வீதம் ஆமோதிக்கிறேன்.

அத்தோடு ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இந்தக் கோரிக்கையும் முன் வைக்கிறேன் என கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து நேற்ரு அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டில் தற்போது தோன்றியுள்ள விடயங்களுக்கு தீர்வுகான மக்கள் அரங்கிற்கு செல்வதே முக்கியமானதாகும். எனவே அரசு நாடாளுமன்றத்தை கலைத்து தேர்தலுக்குச் செல்ல வேண்டும்.

அதற்கும் முடியாவிட்டால். விகிதாசாரதேர்தல் முறைமையின் படி மாகாண சபைத் தேர்தலையாவது நடத்தி மக்களின் கருத்தை தெரிந்து கொள்வேண்டும்.

மாகாண சபை தேர்தலை உடன் நடத்துவதற்கு நாடாளுமன்றத்தில் பிரேரணை ஒன்றை தாக்கல் செய்து நிறைவேற்றுவதன் மூலமாக இரண்டு வாரங்களில் தேர்தலுக்கு செல்ல முடியும். இன்று நாட்டில் எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு முக்கிய காரணமாக இருப்பது ஜனநாயக முறைமையிலான மக்களின் உரிமைகள் மறுக்கப்பட்டு தேர்தல்கள் காலதாமதப்படுத்தப்படுவதாகும்.

இன்று நாட்டின் பொருளாதாரம் அதல பாதாளத்தில் வீழ்ந்துள்ளது, பங்கு சந்தை பாரிய பின்னடைவை கண்டு வருகின்றது.

இந்நிலை தொடருமானால் மக்கள் பெரும் கஷ்டங்களை அனுபவிக்க நேரும் இந்நிலையை நாம் அனைவரும் ஒன்றிணைந்து எதிர்கொண்டு மாற்றி அமைக்க வேண்டும் என்றார்.