நாடாளுமன்ற உறுப்பினரைச் சந்திக்கவுள்ள வன்னி மாவட்ட பட்டதாரிகள் சங்கம்

Report Print Theesan in அரசியல்

வன்னி மாவட்ட பட்டதாரிகள் சங்கத்திற்கும், நாடாளுமன்ற உறுப்பினர் திலும் அமுனுகமவிற்குமான சந்திப்பு இடம்பெறவுள்ளது.

குறித்த சந்திப்பு எதிர்வரும் சனிக்கிழமை ஒருமணியளவில் வவுனியா - சாந்தசோலையில் நடைபெறவுள்ளது என பட்டதாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

இதன்போது வன்னி மாவட்ட பட்டதாரிகள் சங்கத்தில் தமது பதிவுகளை மேற்கொண்ட வேலையற்ற பட்டதாரிகளின் உண்மை நிலைமையினை ஆராயும் முகமாகவும், தற்போது வேலையற்ற பட்டதாரிகள் எதிர்நோக்கும் விடயங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவரின் பட்டதாரிகளின் அரச நியமனம் மற்றும் இளைஞர் விவகாரத்திற்கு பொறுப்பாக நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திலும் அமுனுகமவுடன் சந்திப்பு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers