ஜனாதிபதி - பிரதமர் மற்றும் அமைச்சரவை ஒற்றுமையாக செயற்பட வேண்டும்

Report Print Steephen Steephen in அரசியல்

நாட்டை பற்றி சிந்தித்து, ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சரவை ஒற்றுமையாக செயற்பட வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயபால ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

காலி, அக்கமீமன பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

ஜனாதிபதி அமைச்சரவையின் தலைவர். பிரதமர் நாடாளுமன்றத்தின் தலைவராக செயற்படுகிறார். இரண்டு தரப்பினரும் சுமூகமாக செயற்பட வேண்டும். ஜனாதிபதி இன்றி அமைச்சரவையோ அரசாங்கமோ இல்லை.

அமைச்சரவை சட்டத்திற்கு முரணான வகையில் கூடி தீர்மானங்களை எடுத்தால், அதனை அமுல்படுத்த முடியாது போகும். பல யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரத்தை பெற வேண்டும். அமைச்சரவை கூடாமல் இருப்பது பாரதூரமான நிலைமை.

இதனால், ஆளும் கட்சியின் அமைச்சர்கள், பிரதமரின் ஆலோசனையின்படி பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ள தயாராக இருக்க வேண்டும். வீட்டில் தாய், தந்தை போல் சண்டையிட்டு கொண்டால், அது பாரதூரமான பிரச்சினை எனவும் விஜயபால ஹெட்டியாராச்சி குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers