வஹாபிசவாதிகள் நிறுவியுள்ள சில நிதி நிறுவனங்களுக்கு வெளிநாடுகள் அனுசரணை

Report Print Steephen Steephen in அரசியல்

வஹாபிசவாதிகள் நிறுவியுள்ள சில நிதி நிறுவனங்களுக்கு வெளிநாடுகள் அனுசரணை வழங்கி வருவதாக மேல் மாகாண முன்னாள் ஆளுநர் ஹேமகுமார நாணயக்கார தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற கருத்தரங்கில் வைத்து உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். மேலும் கூறுகையில்,

வங்கியில் சாதாரணமாக கடனை பெறும் போது 14 வீதம் வட்டி அறவிடப்படுகிறது. எனினும் வஹாபிசவாதிகளின் நிறுவனங்களுக்கு ஒரு வீத வட்டியில் கடன் வழங்கப்படுகிறது.

சவுதி அரேபியா, கட்டார் மட்டுமல்லாது மேலும் பல முஸ்லிம் நாடுகள் இலங்கையில் உள்ள வங்கிகளில் முதலீடு செய்துள்ளன.

ஒரு சமய சபையில் அனுமதியை பெற்ற பின் முஸ்லிம் வர்த்தகர்கள் மற்றும் வஹாபிசவாதிகளுக்கு ஒரு வீத வட்டியில் கடன் வழங்கப்படுகிறது எனவும் ஹேமகுமார நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers