மீண்டும் கூடுகிறது அமைச்சரவை! திகதி அறிவிக்கப்பட்டது

Report Print Steephen Steephen in அரசியல்

அமைச்சரவையின் அடுத்த கூட்டம் எதிர்வரும் 18 ஆம் திகதி நடைபெறும் என கடிதம் மூலம் அறிவித்துள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

விசேட அமைச்சரவைக் கூட்டம் கடந்த 7 ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்றது.

இந்த விசேட அமைச்சரவைக் கூட்டத்தில், ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் சம்பந்தாக விசாரிக்க நியமிக்கப்பட்டுள்ள விசேட நாடாளுமன்ற தெரிவுக்குழு தொடர்பாக, ஜனாதிபதிக்கும் அமைச்சரவைக்கும் இடையில் கருத்து முரண்பாடு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் விசாரணைகளை நிறுத்தும் வரை அமைச்சரவைக் கூட்டங்களில் கலந்துகொள்ள போவதில்லை என ஜனாதிபதி கூறியுள்ளார்.

இதனால், பிரதி செவ்வாய் கிழமை தோறும் நடைபெறும் அமைச்சரவைக் கூட்டம் கடந்த செவ்வாய் கிழமை நடைபெறவில்லை. இந்த நிலையில், எதிர்வரும் 18 ஆம் திகதி அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Latest Offers