ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் ஆட்சியாளர் கைது செய்யப்பட வேண்டும்

Report Print Steephen Steephen in அரசியல்

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலை காட்டி அரசாங்கம் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை நிறைவேற்ற முயற்சித்து வருவதாக கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிசிர ஜயகொடி தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற கருத்தரங்கொன்றில் அவர் இதனை கூறியுள்ளார்.

ஏப்ரல் 21 ஆம் திகதி தாக்குதல் நடந்த பின்னர், இந்த தாக்குதலை நடத்தியவர்கள கைது செய்ய போதுமான சட்டங்கள் இல்லை என பிரதமர் கூறினார். இதனால், பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை கொண்டு வர வேண்டும் எனவும் தெரிவித்தார்.

தாக்குதலை அடுத்து புதிய சட்டத்தை கொண்டு வருவதே அரசாங்கத்தின் தேவையாக இருந்தது. வெளிநாட்டு புலனாய்வுக்குழுக்கள் கூட இலங்கையில் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படலாம் என எச்சரித்திருந்தன. எனினும் அரசாங்கம் அதனை கவனத்தில் கொள்ளவில்லை. இதற்கு தற்போதைய அரசாங்கமே பொறுப்பு.

இதனால், கைது செய்யப்பட வேண்டியவர்கள் ஆட்சியாளர்கள். இவர்கள் முதல் குற்றவாளிகள். மக்களுக்கு பாதுகாப்பு வழங்க முடியாது போன அதிகாரிகளை கைது செய்யவதை விடுத்து, சட்டம் போதுமானதாக இல்லை என அரசாங்கம் கூறுகிறது எனவும் சிசிர ஜயகொடி குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers