மதம் மற்றும் இனத்தின் பெயரில் கட்சிகள் ஆரம்பிக்கப்படுவது தடுக்கப்பட வேண்டும்: மகிந்த அமரவீர

Report Print Steephen Steephen in அரசியல்

மதம் மற்றும் இனத்தின் பெயரில் அரசியல் கட்சிகள் ஆரம்பிக்கப்படுவதை தடுக்க தேவையான சட்டங்களை உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளரான நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

அங்குகொலபெலஸ்ஸ பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

மதங்களுக்காக தனித் தனி அமைச்சுக்கள் தேவையில்லை என்று நான் கூறியுள்ளேன். மத விவகாரங்களுக்கு ஒரு அமைச்சு இருந்தால் போதுமானது. அந்த அமைச்சு அரச தலைவரின் கீழ் இருக்க வேண்டும். நான் முன்வைத்துள்ள இந்த யோசனை தொடர்பாக பேசப்பட்டு வருகிறது. இந்த யோசனை எதிர்காலத்தில் அமுல்படுத்தப்படும்.

மதச் சார்பான நிலையங்கள் அமைப்படுவது வரையறுக்கப்பட வேண்டும். பௌத்தர்கள் என்றாலும் அனைவரும் புத்தர் சிலைகளை வைக்க வேண்டியதில்லை.

ஒரே சட்டத்தின் கீழ் விகாரைகள், கோயில்கள் மற்றும் பள்ளிவாசல்கள் நிர்மாணிக்கப்பட வேண்டும் எனவும் மகிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers