காணி மற்றும் தொழில் இன விகிதாசாரத்திற்கு அமைய வழங்கப்பட வேண்டும் - எல்லே குணவங்ச

Report Print Steephen Steephen in அரசியல்

எதிர்காலத்தில் எந்த அரசாங்கம் பதவிக்கு வந்தாலும் இனங்களின் விகிதாசாரத்திற்கு அமைய கோரிக்கைகள் வழங்கப்பட வேண்டும் என எல்லே குணவங்ச தேரர் தெரிவித்துள்ளார்.

யுதுக்கம என்ற அமைப்பு நேற்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

இனங்களின் பிரதிநிதிகள் அங்கம் வகிக்கும் சபை ஒன்றை ஏற்படுத்தி, அதன் ஊடக கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும்.

பொய் கூறி அனைத்து இன மக்களையும் ஏமாற்றுகின்றனர். மக்களுக்கு மன கவலை ஏற்பட்டுள்ளது. அரசாங்கத்தை உன்னிப்பாக அவதானித்து வருகின்றனர். அமைச்சர்கள், ஆளுநர்கள் விலகினர், ஆனால் பிரச்சினைக்கு தீர்வில்லை.

நாட்டை ஒரு சட்டத்தின் கீழ் கொண்டு வர வேண்டும். மக்களின் விகிதாசாரத்திற்கு அமைய செயற்பட வேண்டும். காணிகள், தொழில் வாய்ப்புகள் இன விகிதாசாரத்திற்கு அமைய வழங்கப்பட வேண்டும். எந்த இனத்திற்கும் அநீதி இழைக்கக் கூடாது எனவும் எல்லே குணவங்ச தேரர் குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers