வீரவசனம் பேசுவதை முஸ்லிம் அரசியல்வாதிகள் கைவிட வேண்டும், இல்லையேல் ஆபத்து

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்

முஸ்லிம் அரசியல்வாதிகள் வீர வசனம் பேசுவதை விட்டுவிட்டு உருப்படும் வழியை தேட வேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணியின் அமைப்புச் செயலாளர் விநாயகமூர்த்தி ஜனகன் தெரிவித்துள்ளார்.

பள்ளிவாசல்களில் இனவாதமாக பேசும் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாஹவின் செயற்பாடுகள் தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

அன்று தமிழருக்கு சார்பாக இந்திய வான்படை விமானங்கள் குறைந்தபட்சம் பருப்பு பொட்டலங்களையாவது கொண்டுவந்து யாழில் போட்டு ஜே.ஆர் ஜயவர்தனவை மிரட்டி பணிய வைத்தன.

ஆனால் நேற்று மியன்மாரில் முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டு இலட்சக்கணக்கில் அகதிகளாக துரத்தியடிக்கப்பட்ட போதும் இஸ்லாமிய நாடுகளிலேயே இந்த ஐ.எஸ் பயங்கரவாதிகளாலேயே அப்பாவி முஸ்லிம் மக்கள் கொல்லப்படும் போதும் உலகெங்கும் இலட்சக்கணக்கான முஸ்லிம்கள் அகதிகளாக இன்று அலைந்து திரியும் போதும் எந்தவொரு முஸ்லிம் நாடும் உதவ முன்வர வில்லை.

ஆகவே உலகில் பெரும்பான்மை தாமே என உசுப்பேத்தும் பேச்சு பேசும் ஹிஸ்புல்லா, அப்பாவி இலங்கை முஸ்லிம் மக்களை ஆபத்தில்தான் தள்ளுகிறார்.

முதலில் இலங்கை முஸ்லிம்களை தமக்கு சமமான தம்மவர்களாக அரேபிய நாட்டு ஷேக்குகள் கருதுவதுகூட கிடையாது. இதுதான் கசப்பான உண்மை. ஆகவே அரபு கனவுலகை மறந்து இந்நாடுதான் தம் தாய்நாடு என நினைத்து வாழப்பழக முஸ்லிம்கள் முன்வர வேண்டும்.

முஸ்லிம் அரசியல்வாதிகள் வீர வசனம் பேசுவதை விட்டுவிட்டு உருப்படும் வழியை தேட வேண்டும். இந்த உசுப்பேத்தல் தொடர்ந்தால் மீண்டும் சஹ்ரான்கள் தோன்றி குண்டுவெடிப்புக்களை நடத்தி நாட்டையும் முஸ்லிம் மக்களையும் ஆபத்தில் போடுவது திண்ணம்.

இந்த இஸ்லாமிய பெயர் கொண்ட பயங்கரவாதிகளால் அதிகம் பாதிக்கப்பட்ட கொல்லப்பட்ட தமிழினத்தவன் என்ற முறையில் இதை நான் திடமாக கூறுகிறேன் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Latest Offers