மாவனெல்லையில் இன்று மாலை ஏற்பட்ட குழப்பமான சூழ்நிலை

Report Print Vethu Vethu in அரசியல்

மாவனெல்லையில் இன்று மாலை சற்று குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹசீமின் மாவனெல்ல அலுவலகத்திற்கு முன்னால் பதற்றமான நிலைமை ஒன்று ஏற்பட்டுள்ளது.

அலுவலகத்திற்கு முன்னால் கூடிய கட்சிக்காரர்கள் கபீர் ஹாசீமை மீண்டும் தனது பதவியை ஏற்குமாறு வலியுறுத்தியுள்ளனர்.

இதன்போது தேரர்கள் தலைமையிலான குழுவினர் சென்ற நிலையில் பதற்ற நிலைமை சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் மஹா சங்கத்தினரின் கோரிக்கைக்கு மதிப்பளித்து மீண்டும் தங்கள் பதவியை ஏற்பது தொடர்பில் பதவி விலகிய முஸ்லிம் அரசியல்வாதிகள் அவதானம் செலுத்தியுள்ளதாக முன்னாள் அமைச்சர் அப்துல் ஹலீம் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய எதிர்வரும் செவ்வாய்க்கிழமை இடம்பெறும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு கூட்டத்தில் இது தொடர்பில் தீர்மானம் மேற்கொள்ளப்படும் என அவர் கண்டியில் ஊடகவியலாளர் சந்திப்பில் குறிப்பிட்டுள்ளார்.

பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீனுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், அரசாங்கத்திலுள்ள அனைத்து முஸ்லிம் அமைச்சர்களும் தமது பதவியை ராஜினாமா செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Offers