மைத்திரி - ரணிலுக்கு இடையில் முரண்பாடு! சமரசப்படுத்தும் முயற்சியில் சஜித்

Report Print Murali Murali in அரசியல்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையிலுள்ள முரண்பாடுகளை தீர்த்து இருவரையும் சமரசப்படுத்தும் முயற்சியில் அமைச்சர் சஜித் பிரேமதாச ஈடுபட்டு வருவதாக அரசியல் வட்டாரங்களிலிருந்து அறிய முடிகின்றது.

இந்த சமரச முயற்சியின் ஒரு கட்டமாகவே அமைச்சரவை சர்ச்சை தொடர்பில் சஜித் பிரேமதாச, ஜனாதிபதி மைத்திரியை சந்தித்துள்ளார் என கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அந்த செய்தியில் தொடர்ந்தும் கூறப்பட்டுள்ளதாவது,

“21/4 தாக்குதல்கள் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற தெரிவுக்குழுவிற்கு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அழைக்கப்படுவதற்கு ஜனாதிபதி கடும் எதிர்ப்பினை வெளியிட்டிருந்தார்.

அத்துடன், தனது கோரிக்கைக்கு இணக்கம் தெரிவிக்கும் வரை அமைச்சரவையைக் கூட்டப்போவதில்லை எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருந்தார். இதனால் கடந்த அமைச்சரவை கூட்டப்படவில்லை.

அமைச்சரவை கூட்டாமைக்கு பல்வேறு தரப்பினர்களும் கடும் அதிருப்தியை வெளியிட்டிருந்தனர். இதனால் இந்த பிரச்சினைக்கு உடனடி தீர்வை காணவேண்டிய கட்டாயத்திற்கு அரசாங்கம் தள்ளப்பட்டது.

இந்நிலையிலேயே, அமைச்சர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட முக்கிய அமைச்சர்கள் ஜனாதிபதியை சந்தித்து பேசி பிரச்சினைக்கு தீர்வு கண்டுள்ளதாக” அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

Latest Offers