மகிந்த யாரை அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்க போகின்றார்?

Report Print Sindhu Madavy in அரசியல்

விரைவில் எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவித்தலை வெளியிடவுள்ளார் என நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித்த அபேகுணவர்த்தன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளர் குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் மேலும் கருத்து வெயிட்ட அவர்,

எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி இடம்பெறவுள்ள ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் தேசிய பொது கூட்டத்திலே குறித்த அறிவித்தல் வெளியிடப்படும் எனவும், நாங்கள் தேர்தலுக்கு தயாராக உள்ளோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும் கடந்த மாதம் ஜனாதிபதி வேட்பாளராக தான் போட்டியிடப்போவதாக, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ பகிரங்கமாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers