சஹ்ரான் இலங்கையின் இளைஞன்! நானும் அவர் போல மாறியிருப்பேன் - ஞானசார தேரர்

Report Print Steephen Steephen in அரசியல்

உயிர்த்த ஞாயிறு தினத்தில் தற்கொலை குண்டை வெடிக்க செய்த சஹ்ரான் ஹசீம் இலங்கையின் இளைஞன் எனவும், முஸ்லிம் இனத்தவராக பிறந்திருந்தால் தானும் சஹ்ரான் போன்றவராக மாற வாய்ப்பு ஏற்பட்டிருக்கும் எனவும் பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

காலியில் உள்ள விகாரை ஒன்றில் நேற்று நடைபெற்ற சமய நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

மேலும் கூறுகையில், இலங்கையின் சம்பிரதாயபூர்வமான முஸ்லிம் மக்களுடன் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை.

இந்த நாடு ஒரு வீடு. இந்த வீட்டுக்குள் விஷ பாம்பு நுழைந்திருந்தால் அனைவரும் இணைந்து அந்த விஷ பாம்பை அழிக்க வேண்டும்.

எனது மனம் துறவரம் பூண்டிருந்தாலும் தேசிய பிரச்சினையின் போது எனது பங்களிப்பு வித்தியாசமானது என ஞானசார தேரர் குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers