சஹ்ரானுடன் தொடர்பு வைத்துள்ள மொட்டுக் கட்சியினர்? புகைப்படங்கள் ஏராளம்

Report Print Jeslin Jeslin in அரசியல்

எம்மை குற்றம் சுமத்தும் மொட்டுக் கட்சியினர் சஹ்ரானுடன் இருக்கும் புகைப்படங்கள் எவ்வளவோ இருக்கின்றன என அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

தனியார் ஊடகம் ஒன்றுக்கு அவர் வழங்கிய பிரத்தியேக செவ்வியில் இதனைத் தெரிவித்துள்ளார்.

இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

இஸ்லாமிய அடிப்படைவாதிகள் இந்தத் தாக்குதலை நேரடியாக கத்தோலிக்கர்களின் மீது நடத்தியிருந்தனர். எனினும் அந்த சமூகத்தில் இருந்து அதற்கு எந்த பிரதிபலிப்பும் வரவில்லை.

கர்தினால் மற்றும் அங்லிக்கன் சபையின் அறிவுபூர்வமான செயற்பாடே அதற்குக் காரணம். எனினும் பௌத்த சமூகத்தின் கொடிய செயற்பாடுகள் மிகவும் வருந்தத்தக்கவை. அதனால் எமக்கிருந்த சர்வதேச ஆதரவு மற்றும் அனுதாபம் இல்லாமல் போனது.

கற்களால் தாக்குதல் நடத்தியோ, கருத்தடை மாத்திரைகள் பற்றி பேசியோ ஐ.எஸ் தீவிரவாதத்தை ஒழிக்க முடியாது. தற்கொலை தாக்குதலுக்குத் தயாரான பென்ஸ்கார்களில் வந்து தாக்குதல் நடத்தும் பயங்கரமான அடிப்படைவாத பயங்கரவாதத்துக்கு நாம் முகம்கொடுத்துள்ளோம்.

இதனை மனதில் கொண்டு நாம் செயற்படவேண்டும். மகாநாயக்கர்களுக்கான முன்னுரிமை அவ்வாறே வழங்கப்படுகின்றது.

கடந்த காலங்களில் சிங்களவர்களுக்கு ஆதரவாக இருப்பதாக கூறியவர்கள் அவர்களுக்காக செய்த நாசத்தை மதிப்பிட முடியாது.

முஸ்லிம் கடைகளைத் தாக்கி கூச்சலிட்ட பேஸ்புக் வீரர்களாக செய்த காரியங்கள் குறித்து சிங்களவர்கள் வெட்கப்படவேண்டும். துட்டகைமுனு போன்ற வீரர்கள் வாழ்ந்த நாட்டில் இத்தகைய செயற்பாடுகள் கோழைத்தனமானது.

எம்மை குற்றம் சுமத்தும் மொட்டுக் கட்சியினர் சஹ்ரானுடன் இருக்கும் புகைப்படங்கள் எவ்வளவோ இருக்கின்றன. இப்ராஹிமின் பணத்தில் அரசியல் நடத்தும் கட்சியினர் எத்தனையோ பேர் இருக்கினர். இவர்களுக்கு எதிராக சட்டம் செயற்படுத்தப்படுவதில்லை. குற்றவாளிகள் இனங்காணப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers