தன்னைப் பற்றிய செய்திகள் வெளிவரக்கூடாது! மைத்திரியின் எண்ணங்கள்

Report Print Jeslin Jeslin in அரசியல்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் அமைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற தெரிவுக்குழு தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சிறுபிள்ளைத் தனமாக நடந்து கொள்கின்றார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு அவர் வழங்கிய பிரத்தியேக செவ்வியில் இதனைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாடாளுமன்றம் முடக்கப்பட்டாலும் கூட நாடாளுமன்றத் தெரிவுக்குழுவை கலைக்க முடியாது. நாடாளுமன்றம்தான் மக்களின் சக்தியாக இருக்கின்ற சட்டங்களை இயற்றுகின்ற நீதித்துறைக்கு வலுச் சேர்க்கின்ற அமைப்பாக இருந்து கொண்டிருக்கின்றது.

அந்த வகையில் இந்த தெரிவுக்குழுவை கலைப்பதற்கு ஜனாதிபதியாலும் முடியாது. தன்னைப் பற்றிய செய்திகள் வெளியில் வரக் கூடாது என ஜனாதிபதி கருதுவதாக தெரிகின்றது.

தெரிவுக்குழுவை நிறுத்த வேண்டும் என்று அமைச்சரவைக் கூட்டத்தை முடக்கியுள்ளார். சட்ட ரீதியாகக் கூட தெரிவுக்குழுவை நிறுத்த முடியாது. ஆகவே ஜனாதிபதி தன்னுடைய அதிகாரம் என்னவென்பதை புரியாமல் செயற்படுகின்றார் என்பது என்னுடைய கருத்து என குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers