மகிந்தவின் அண்ணனைப் போன்ற ஒருவர் ஜனாதிபதியாக வந்தால்.... தேரரின் மகிழ்ச்சியான விருப்பம்.!

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்

எதிர் கட்சி தலைவர் மகிந்த ராஜபக்சவின் சகோதரர் சமல் ராஜபக்ச போன்ற ஒருவர் ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்கப்பட்டால் தான் மிகவும் மகிழ்ச்சியடைவேன் என அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க தேரர் வரகாகொட ஸ்ரீ ஞானரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.

இன்று கண்டியில் நடைபெற்ற பொசன் நிகழ்வொன்றிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் பேசிய அவர்,

நாடு நாசமடைந்ததற்கு ரணில் தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சியே பொறுப்புக் கூறவேண்டு.

இதேவேளை, தற்பொழுது கிடைத்த மிகவும் மகிழ்ச்சியான செய்தி, எதிர்காலத்தில் ஜனாதிபதியாக வருபவர் எமது சமல் ராஜபக்ஷ போன்ற ஒருவர் எனில் மகிழ்ச்சியடைய முடியும்.

இதை உண்மையிலேயே நாம் அறிந்திருக்கவில்லை. நாம் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம் என்றார்.

Latest Offers