ரணில் அரங்கேற்றிய நாடகம்! முஸ்லிம் அமைச்சர்கள் பதவி விலகியதன் பின்னணி இதுதான்

Report Print Sindhu Madavy in அரசியல்

பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடையதாக பல குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ள ரிஷாத் பதியுதீன் அமைச்சுப்பதவியை வகிப்பது நாகரீகமற்றது.

இதை அவரும் உணரவில்லை இந்த அரசாங்கமும் உணரவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

முஸ்லிம் அமைச்சர்களின் பதவி விலகல் வெறும் நாடகம் என்பது தற்போது நாட்டுமக்களுக்கு தெட்டத்தெளிவாக புலனாகியுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

ரிஷாத் பதியுதீனை பாதுகாக்கும் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட ஐக்கிய தேசிய கட்சியின் தந்திரமே இது. ரிஷாத் பதியுதீன் பாதுகாக்கப்பட்டதன் பின்னர் இது நிறைவுக்கு வந்துள்ளது.

குறிப்பாக உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் மீது பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. இது தொடர்பில் அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இருப்பினும் அதை அரசாங்கம் உதாசீனம் செய்துள்ளது.. இதன் தாக்கத்தை உணர்ந்த அத்துரலியே ரதன தேரர் உண்ணாவிரதம் இருக்கும் அளவுக்கு நிலைமை சென்றது.

தேரருக்கு ஆதரவாக பலர் குரல் கொடுக்க ஆரம்பித்ததை அடுத்து நிலைமையை சமாளிப்பதற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் அரங்கேற்றப்பட்ட நாடகமே முஸ்லிம் அமைச்சர்களின் பதவி விலகல்.

தற்போது அரங்கேற்றப்பட்ட நாடகத்தின் நோக்கம் நிறைவேறி ரிஷாத் பதியுதீன் பாதுகாக்கப்பட்டுள்ளார். ஆகவே பதவி விலகிய அமைச்சர்கள் மீண்டும் தமது பதவிகளை பொறுப்பேற்க போகின்றனர்.

தற்போது மாநாயக்க தேரர்களின் வேண்டுகோளுக்கு மதிப்பளித்து தமது பதவிகளை மீண்டும் பொறுப்பேற்க போவதாக அவர்கள் அறிவித்துள்ளனர்.

இவர்கள் தமது பதவிகளை விட்டு விலகும் போது மாநாயக்க தேரர்களை கேட்டா விலகினார்கள்? என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளார்.

Latest Offers