மஞ்சள் உடையணிந்த தீவிரவாதமே இப்போது நாட்டில்!

Report Print Kanmani in அரசியல்

மஞ்சள் உடையணிந்த தீவிரவாதமே இப்போது நாட்டில் இருக்கின்றதாக மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி தெரிவித்துள்ளார்.

தனியார் ஊடகம் ஒன்றுக்கு அவர் வழங்கிய பிரத்தியேக செவ்வியில் இதனைத் தெரிவித்துள்ளார்.இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

மஞ்சள் உடையணிந்த தீவிரவாதமே இப்போது நாட்டில் இருக்கின்றது.கட்டளைக்கு இணங்கவே ஊர்வலம் சென்றார்கள். இலங்கை முஸ்லிம்கள் வரலாற்றில் முதன் முதலாக ஆண், பெண், பிள்ளைகள் என அனைவரையும் வீதிக்கு இறக்கி சீரழித்தவர்கள் தான் இந்த தௌஹீத் ஜமாத் அமைப்பு .

தெரிவுக் குழு முன்னிலையில் அஸாத் சாலி காட்டி கொடுத்து விட்டார் என நினைப்பார்கள். ஆனால் நான் யாரையும் காட்டி கொடுக்கவில்லை. கள்வனை கள்வன் என்றும் தீவிரவாதியை தீவிரவாதி என்றும் வெளிப்படையாக கூறியுள்ளேன்.

இந்நிலையில் தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்புக்கும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவிற்கும் தொடர்புள்ளது.

கோத்தபாய ராஜபக்ஷ தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்புடன் தொடர்பை பேணியதற்கான நோக்கம் எதுவாக இருந்திருக்கலாம்?முஸ்லிம்களை பிரிக்க வேண்டும் என்பதே இவர்களின் நோக்கம்.

இப்போது முஸ்லிம் பிரதிநிதிகள் ஒன்றிணைந்து பதவி விலகியதே இந்த நாட்டில் பிரச்சினையாக இருக்கின்றது. இவர்கள் எதிர்பார்க்கவில்லை.

உண்ணாவிரதம் என்ற போர்வையில் ஜீவனியை குடித்துகொண்டிருந்த ரத்ன தேரருக்கும் கோத்தபாயவுக்கும் தொடர்பு உள்ளது. அவசர காலச் சட்டம் அமுலில் இருக்கும் போது எவ்வாறு உண்ணாவிரதம் இருக்க முடியும். ஏன் நீதியை நிலை நாட்டவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

Latest Offers