மகிந்த இருக்கும் வரை கோத்தாவால் முடியாது! சந்தர்ப்பமே இல்லை என்கிறார் ராஜித

Report Print Jeslin Jeslin in அரசியல்

மகிந்த ராஜபக்ச இருக்கும் வரை கோதபாய ராஜபக்ச ஜனாதிபதி பதவிக்கு வருவதற்கு சந்தர்ப்பம் கிடைக்காது என அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

தனியார் ஊடகம் ஒன்றுக்கு அவர் வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே இதனைத் தெரிவித்துள்ளார்.

இங்கு அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,

2015ஆம் ஆண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தேர்தலில் வெற்றிப் பெற்று பதவி ஏற்ற பின்னர் மகிந்த ராஜபக்ச ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை ஏற்றுக் கொள்ளுமாறு மைத்திரியிடம் கூறினார். அப்போது நாங்களும் அதனை ஏற்றுக்கொள்ளுமாறு கூறினோம்.

மைத்திரிபால அதனை ஏற்றுக்கொண்ட பின்னர் நாங்கள் எதிர்ப்பார்த்த அரசியல் பயணம் முற்றாக மாற்றமடைந்தது. ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் என்ற காரணத்தினால் ஜனாதிபதிக்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினரைப் போன்று செயற்பட நேரிட்டது.

விருப்பமிருந்ததோ, விருப்பமில்லையோ ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை பாதுகாக்க வேண்டிய நிலை அவருக்கு ஏற்பட்டது.

ஜனாதிபதிக்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராகுவதற்கு ஐக்கிய தேசியக் கட்சியினருக்கு விருப்பம் இருந்தாலும் அவர் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினரைப் போன்று செயற்பட ஆரம்பித்த தருணத்திலிருந்தே முறுகல் நிலைமை தொடங்கிவிட்டது.

எதிர்வரும் தேர்தலில் கோத்தபாய ராஜபக்ச களமிறங்குவது என்பது எப்போது இடம்பெறாது. மகிந்த ராஜபக்ச இருக்கும் வரை அந்த சந்தர்ப்பம் கிடைக்காது.

கோத்தபாய அவர் மீது தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகளுக்கு நீதிமன்றத்திற்கு கொடுக்கும் அழுத்தமாகவே இவ்வாறான பிரச்சாரங்களை முன்னெடுத்துச் செல்கின்றார்.

இருப்பினும் அவர் போட்டியிட்டாலும் அவருக்கு இருக்கும் இனவாதத்தினால் அவரால் வெற்றி பெற முடியாது என தெரிவித்துள்ளார்.

Latest Offers