பதில் அமைச்சுப் பதவிகளின் கடமைகளை மேற்கொள்ள வேண்டாம் என பிரதமர் அறிவுறுத்தல்

Report Print Kamel Kamel in அரசியல்

பதில் அமைச்சுப் பதவிகளின் கடமைகளை மேற்கொள்ள வேண்டாம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

அண்மையில் முஸ்லிம் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் மற்றும் ராஜாங்க அமைச்சர்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு பதவி விலகிய முஸ்லிம் அமைச்சர்களுக்கு பதிலீடாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சில பதில் அமைச்சர்களை நியமித்திருந்தார்.

புத்திக்க பத்திரண, அனோமா கமகே மற்றும் லக்கி ஜயவர்தன உள்ளிட்டவர்கள் இவ்வாறு பதில் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

கட்சியின் அனுமதியின்றியே இவர்கள் பதில் அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்றுக்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சட்டத்தை மீறும் வகையில் பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் அந்தப் பதவிகளில் தொழிற்பட வேண்டாம் எனவும் பிரதமர் அறிவுறுத்தியுள்ளார்.

இந்த பதில் அமைச்சர்கள் நாளைய தினம் நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்பார்களா என்பதும் சந்தேகமே எனத் தெரிவிக்கப்படுகிறது.