ஜனாதிபதி தேர்தலில் களமிறங்குகிறாரா அமைச்சர் சம்பிக்க ரணவக்க?

Report Print Kamel Kamel in அரசியல்

தாம் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதாக சில வதந்திகள் பரப்பப்பட்டு வருவதாக அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

அநுராதபுரத்தில் நேற்றைய தினம் நடைபெற்ற மத வழிபாட்டு நிகழ்வுகளில் பங்கேற்றதன் பின் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கூறுகையில், அமைச்சரவை நாளைய தினம் கூட உள்ளது. இந்த நாட்டில் ஜனாதிபதி வேட்பாளர் தெரிவு நட்பின் அடிப்படையிலும் இன்னும் சில பக்கச்சார்பான முறைகளின் அடிப்படையிலும் மேற்கொள்ளப்படுகின்றது.

இந்த முறைமைகளை நாம் அடுத்து வரும் ஜனாதிபதி தேர்தலில் மாற்றியமைப்போம்.

தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த, சாதாரண தரம் உயர்தரத்தில் சித்தி எய்திய, தொழில்சார் கல்வியை பூர்த்தி செய்தவர்களிடம் நாட்டின் ஆட்சி அதிகாரம் ஒப்படைக்கப்படும்.

இதற்கான முதல் படியை நாம் எடுத்து வைப்போம். நான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதாக சிலர் போலியான பிரச்சாரங்களை செய்து வருகின்றனர் என சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.