மக்கள் மத்தியில் தூண்டி விடுகின்ற தலைவர்கள் இருக்கின்றார்கள்: அமீரலி

Report Print V.T.Sahadevarajah in அரசியல்

முஸ்லிம் மக்கள் மத்தியிலும், தமிழர்கள் மத்தியிலும் மக்களை தூண்டி விடுகின்ற தலைவர்கள் இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.எம்.அமீரலி தெரிவித்துள்ளார்.

கோட்டைக்கல்லாறு, களுவாஞ்சிகுடி ஆகிய பிரதேசங்களில் தையல் பயிற்சிகளை முடித்து கொண்டவர்களுக்கு தையல் இயந்திரம் வழங்கும் நிகழ்வு நேற்று முன்தினம் இராசமாணிக்கம் மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.

இந்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,

முஸ்லிம் மக்கள் மத்தியிலும், தமிழர்கள் மத்தியிலும் உசுப்பேத்தி விடுகின்ற தலைவர்கள் இருக்கின்றார்கள்.

எல்லோரையும் எல்லா காலத்திலும் ஏமாற்ற முடியாது. அரசியல் உறவாக இருக்கலாம் அல்லது தந்தை - மகன் உறவாக இருக்கலாம் அல்லது தாய் - மகன் உறவாக இருக்கலாம்.

எவ்வாறான உறவாக இருந்தாலும் ஒரு பொய்யை வைத்து கொண்டு எவரையும் ஏமாற்ற முடியாது. அது எப்பாடியாவது வெளி வந்தே தீரும்.

இலங்கையில் உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவங்கள் திட்டமிட்ட சதியாகும். யாரோ இவர்களை கொந்திறாத்து எடுத்து இந்த வேலைளை செய்துள்ளார்கள். இதனை யார் செய்தார்கள்?

இஸ்லாமிய, தமிழ், கிறிஸ்தவ சமூகத்தின் ஒட்டுமொத்த உறவினை சீர்குலைப்பதற்காக செய்தார்களா? இவ்வாறு செய்தால் தான் இவர்களை அரசியலில் தோக்கடிக்க முடியும் அல்லது எமது பக்கம் இழுக்க முடியம்.

இதன் ஊடாகத்தான் கை நழுவிப்போன ஆட்சியினை கைப்பற்ற முடியம் என்பதற்காக மேற்கொண்டார்களா? போன்ற விடயங்களை இந்த மாவட்டத்தில் இருக்கின்ற ஒட்டுமொத்த மக்களுக்கும் தெளிவுபடுத்த வேண்டிய பொறுப்பு எனக்கு இருக்கின்றது.

வெடிக்க வைத்தவர்கள் முஸ்லிம்கள். இறந்தவர்கள் தமிழர்கள், சிங்களவர்கள். ஆனால் இதன் சூத்திரம் எங்கோ இருப்பவர்கள் கதிரையினை பெற்றுக் கொள்வதற்காக தான். இதனை அனைவரும் தெளிவாக விளங்கி கொள்ள வேண்டும்.

மட்டக்களப்பில், கொழும்பில், நீர்கொழும்பில் வெடித்த குண்டுகளை வெடிக்க வைத்து இறந்தவனுக்கும் தெரியாது எதற்காக வெடித்தோமென்று.

இறந்த மக்களுக்கும் தெரியாது எதற்காக இறந்தோமென்று. ஆனால் கதிரையை எவ்வாறாவது பிடித்து வைத்து கொள்வதற்காக மேற்கொள்ளப்பட்ட வேலைத்திட்டம் இதற்குள் மறைந்திருப்பதான பாரிய சந்தேகம் எமக்கு இருக்கின்றது.

எனவே எனது அன்புக்குரிய தமிழ் உறவுகளே, இந்த நாட்டிலே சிறுபான்மை மக்கள் என்பதனை நாங்கள் ஏற்று கொள்கின்றோம்.

தமிழர், முஸ்லிம்கள், சிங்களவர்கள் இந்த நாட்டில் ஒற்மைப்படாமல் எதனையும் சாதித்துவிட முடியாது என தெரிவித்துள்ளார்.

Latest Offers