அரசாங்கம் சர்வஜன வாக்கெடுப்பு சூழ்ச்சித் திட்டமொன்றை முன்னெடுக்கின்றது!

Report Print Kamel Kamel in அரசியல்

அரசாங்கம் சர்வஜன வாக்கெடுப்பு சூழ்ச்சித் திட்டமொன்றை முன்னெடுப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தவிசாளர் ஜீ.எல்.பீரிஸ் குற்றம் சுமத்தியுள்ளார்.

உரிய தினத்தில் நடத்தப்பட வேண்டிய தேர்தல்களை ஒத்தி வைத்து, பொதுத் தேர்தலை உரிய காலத்திற்கு முன்னதாக நடாத்துவதற்கு அரசாங்கம் சூழ்ச்சித் திட்டம் தீட்டி வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்…

இவ்வாறு சர்வஜன வாக்கெடுப்பு நடாத்துவது அரசியல் அமைப்பிற்கு முரணானதாகும்.

சர்வஜன வாக்கெடுப்பு நடத்தி அதன் ஊடாக மக்களின் அங்கீகாரத்தைப் பெற்றுக்கொண்டு உரிய காலத்திற்கு முன்னதாக பொதுத் தேர்தலை நடாத்துவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

நான்கரை ஆண்டுகள் முடியும் வரையில் நாடாளுமன்றைக் கலைப்பதற்கு அரசியல் அமைப்பில் இடமில்லை.

நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை நிரூபித்தே தேர்தலை முன்கூட்டியே நடத்தப்பட முடியும்.

தற்போதைய அரசியல் அமைப்பின் பிரகாரம் முதலில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட வேண்டும், அதற்கு முன்னர் சர்வஜன வாக்கெடுப்பு அல்லது நாடாளுமன்றத் தேர்தல் நடாத்துவதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி இடமளிக்காது என ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.