நாட்டு மக்கள் மீது அக்கறை கொள்ளாத ஐக்கிய தேசிய கட்சி!

Report Print Sindhu Madavy in அரசியல்

காலம் சென்ற ஐக்கிய தேசிய கட்சியின் அமைச்சர் காமினி திஸாநாயக்கவின் கொள்கைகளையும் அவர் நாடு மீது கொண்டு தனித்துவ பற்றினையும் இன்று எவரும் முன்னெடுத்து செல்லவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இவ் விடயம் தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்ட அவர்,

தேவையற்ற விடயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஐக்கிய தேசிய கட்சிக்கு நாட்டு மக்கள் மீது எவ்வித அக்கறையும் இல்லை. முறையற்ற விதத்தில் செயற்படும் ஐக்கிய தேசிய கட்சியின் ஆயுட்காலம் முடிவடைந்து வருகின்றது.

அந்தவகையில் 2015ஆம் ஆண்டு இவர்களிடம் ஆட்சியை ஒப்படைந்த மக்கள் தாங்கள் செய்த தவறினை இன்று நன்கு புரிந்து கொண்டுள்ளார்கள்.

ஐக்கிய தேசிய கட்சியே அழிவினை தேடிக் கொண்டது. எவரும் ஏற்படுத்தவில்லை என அஸ்கிரிய பீட மகாநாயக்க தேரர் வரகாகொட ஸ்ரீ ஞானரத்ன தேரர் குறிப்பிட்டுள்ளமைக்கு அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன?

2015ஆம் ஆண்டு நாட்டு மக்கள் செய்த தவறினை இன்று நன்கு புரிந்து கொண்டுள்ளார்கள். மக்கள் மத்தியில் சென்று வாக்கு கோருவதற்கு ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான அரசாங்கத்திற்கு எவ்வித தகைமையும் கிடையாது எனவும் தெரிவித்துள்ளார்.