சிங்கள பௌத்த ராச்சியத்தை கோதாவினால் மட்டுமே உருவாக்க முடியும்!

Report Print Kamel Kamel in அரசியல்

சிங்கள பௌத்த ராச்சியத்தை முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவினால் மட்டுமே உருவாக்க முடியும் என சின்தன பர்ஷதய என்னும் அமைப்பின் செயலாளர் பேராசிரியர் நலின் சில்வா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். சிங்கள பௌத்த ராச்சியத்தை உருவாக்குவதற்கான ஒரே தகுதி கோத்தபாய ராஜபக்சவிற்கே உண்டு எனத் தெரிவித்துள்ளார்.

மங்கள சமரவீரவிற்கு புரியாவிட்டால் பராவாயில்லை எனவும், நாட்டின் சிலருக்கு சில விடயங்கள் புரிவதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சிங்கள பௌத்த இராச்சியம் என்பதனை உறுதியிட்டுக் கூறக்கூடிய ஒருவர் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்க வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

ரணில், மைத்திரி, பசில் மற்றும் மஹிந்த போன்றவர்கள் சிங்கள பௌத்த ராச்சியம் அமைப்பதற்கு உதவ மாட்டார்கள் எனவும், அவர்கள் சிங்கள பௌத்தமற்ற ஏனைய வாக்குகளை இலக்கு வைத்து முயற்சித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.