மோடியுடனான சந்திப்புக்கு இன்னும் உத்தியோகபூர்வ அழைப்பு கிடைக்கவில்லை! தமிழ் தேசிய கூட்டமைப்பு

Report Print Sindhu Madavy in அரசியல்

இந்திய பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை இந்தியாவில் வைத்து சந்திப்பதற்கான உத்தியோகபூர்வ அழைப்பு இன்னும் வெளியாக வில்லை என்று கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அண்மையில் இலங்கைக்கு வந்த இந்திய பிரதமர் நரேந்திர மோடியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சந்தித்திருந்த போது, கூட்டமைப்பினரை இந்தியாவிற்கு வருமாறு மோடி அழைப்பு விடுத்திருந்தார்.

எனினும் இதுவரை இந்திய மத்திய அரசாங்கத்திடமிருந்து இந்த சந்திப்பிற்கான அதிகாரபூர்வமான அறிவிப்பும் வெளியாக வில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிடுகையில்,

“சந்திப்பு தொடர்பில் இந்திய மத்திய அரசாங்கத்திடமிருந்து உத்தியோகபூர்வ தகவல்கள் எதுவும் தங்களுக்கு அனுப்பப்படவில்லை என கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரகமும் அறிவித்துள்ளதாக” கூறியுள்ளார்.