கை - மொட்டு பேச்சுகள் இழுபறியில் இன்றைய சந்திப்பு திடீரென இரத்து!

Report Print Rakesh in அரசியல்

புதிய அரசியல் கூட்டணி அமைப்பது தொடர்பில் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும், ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கும் இடையில் இன்று நடைபெறவிருந்த ஆறாம் சுற்றுப் அடுத்த வாரம் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதன்படி எதிர்வரும் 26ஆம் திகதி மாலை 4 மணிக்கு கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் குறித்த சந்திப்பு நடைபெறும் என பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

புதிய அரசியல் கூட்டணி அமைப்பது தொடர்பில் இரு கட்சிகளுக்கும் இடையிலான ஐந்தாம் சுற்றுக் கலந்துரையாடல் கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் கடந்த 7ஆம் திகதி நடைபெற்றது.

அடுத்த சுற்றுப் பேச்சு இன்று 17ஆம் திகதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையிலேயே அது திடீரெனப் பிற்போடப்பட்டுள்ளது.

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கும் இடையில் ஏற்பட்டுள்ள முறுகல் காரணமாகவே இந்தப் பேச்சு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என அரசியல் வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது.