ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் ராஜபக்ச குடும்பத்துக்குள் மோதல்!

Report Print Rakesh in அரசியல்

“ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தனித்தே போட்டியிடும். இதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை இனியும் நம்புவதற்கு நாம் தயாரில்லை.”

இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தவசாளர் பசில் ராஜபக்ச தெரிவித்தார்.

“ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் பட்டியலில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவின் பெயரே முதலிடத்தில் உள்ளது” எனவும் அவர் குறிப்பிட்டார்.

“எனினும், ஜனாதிபதித் தேர்தல் அறிவிப்பு வெளியானதும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் உயர்பீடமே வேட்பாளர் தொடர்பில் இறுதி முடிவு எடுக்கும்” எனவும் அவர் கூறினார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் ஒன்றாகச் சேர்ந்து வேட்பாளரைக் களமிறக்குவதா அல்லது தனித்தனியாக வேட்பாளர்களைக் களமிறக்குவதா என்றுகூட இன்னமும் தீர்மானிக்கவில்லை.

அதுக்கிடையில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ச என்று எப்படிக் கூற முடியும்?' எதிர்க்கட்சித்

தலைவர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்திருந்தார்.

இது தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நிறுவுநர் பசில் ராஜபக்சவிடம் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.