தெற்காசியாவின் புதிய வகை பயங்கரவாத அச்சுறுத்தல்! நேபாளம் விடுத்துள்ள எச்சரிக்கை

Report Print Murali Murali in அரசியல்

இலங்கையில் இடம்பெற்ற தற்கொலை குண்டுதாக்குதலானது தெற்காசியாவின் “புதிய வகை பயங்கரவாத” அச்சுறுத்தலை காட்டிநிற்கின்றது என நேபாளம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அந்நாட்டின் துணை பிரதமரும், பாதுகாப்பு அமைச்சருமான ஈஸ்வர் போக்ரெல் இதனை தெரிவித்துள்ளார். காத்மண்டுவில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

“உலகின் பல பகுதிகளிலும் அப்பாவி பொதுமக்கள் மீது மேற்கொள்ளப்படும் பயங்கரவாத தாக்குதல்களை நாங்கள் கண்டிருக்கிறோம், அந்த தாக்குதல்களுக்கு நாங்கள் வருந்துகின்றோம்.

இலங்கையில் நடந்த ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பு தாக்குதல்கள் தெற்காசியாவில் ஒரு “புதிய வகை பயங்கரவாத” அச்சுறுத்தல் வந்துவிட்டது என்பதை தெளிவாக காட்டிஇருக்கின்றது.

இந்நிலையில், பயங்கரவாதத்தை எதிர்ப்பது குறித்து உலகெங்கிலும் உள்ள எங்கள் நட்பு நாடுகளின் பாடங்கள் மற்றும் அனுபவங்களிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது” என அவர் மேலும் கூறியுள்ளார்.

இதேவேளை, கடந்த ஏப்ரல் 21ம் திகதி இடம்பெற்ற தொடர்தற்கொலை குண்டுதாக்குதலில் 260க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.