இன்னும் 126 நாட்களில் அறிவிக்கப்படும்! அரசாங்கத்தின் முயற்சியை வெளிப்படுத்தும் எம்.பி

Report Print Kamel Kamel in அரசியல்

ஜனாதிபதி தேர்தலை காலம் தாழ்த்தும் நோக்கில் பல்வேறு தவறான முயற்சிகளை மேற்கொண்டாலும், அரசியல் அமைப்பிற்கு பிரகாரம் ஜனாதிபதி தேர்தலை ஒத்தி வைக்க முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அழப்பெரும தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்லையில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைமை காரியாலயத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், அரசியல் அமைப்பின் 31,3 சரத்துக்களில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட வேண்டிய கால வரையறை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இதன்படி எதிர்வரும் டிசம்பர் மாதம் 9ஆம் திகதிக்கு முன்னதாக தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

எனினும் க.பொ.த சாதாரண தர பரீட்சை டிசம்பர் மாதம் இரண்டாம் திகதி ஆரம்பாக உள்ளமையினால் இன்றிலிருந்து 153 நாட்களுக்குள் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

இந்த விடயம் தொடர்பில் மக்கள் ஐயப்பாடுகளை ஏற்படுத்தி கொள்ள வேண்டியதில்லை. ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பு மனு கோருதல் இன்னும் 126 நாட்களில் அறிவிக்கப்படும்.

பல்வேறு சூழ்ச்சி திட்டங்களின் மூலம் ஜனாதிபதி தேர்தலை காலம் தாழ்த்துவதற்கு அரசாங்கம் முயற்சிக்கின்றது என குறிப்பிட்டுள்ளார்.