வழமைப் போல் அமைச்சரவைக் கூட்டம் ஆரம்பம்

Report Print Malar in அரசியல்

ஜனாதிபதி செயலகத்தில் சற்று முன்னர் அமைச்சரவைக் கூட்டம் ஆரம்பமாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகின்ற போதிலும் கடந்த வாரம் நடைபெறவில்லை.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் நடவடிக்கைகளை நிறுத்தும் வரை அமைச்சரவைக் கூட்டத்தை பங்கேற்க போவதில்லை என ஜனாதிபதி தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

எனினும் வழமை போன்று இன்று அமைச்சரவைக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.