தாஜ் சமுத்ராவில் குண்டுவெடிக்காமைக்குக் காரணம் இருக்கின்றது! அரசியல் முக்கியஸ்தர் வெளியிட்ட தகவல்

Report Print Satha in அரசியல்

நாட்டில் கடந்த மாதம் 21ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற பயங்கரவாத குண்டுத் தாக்குதல் சம்பவத்துடன் ஏதோவொரு வெளிநாட்டு சக்தி தொடர்புப்பட்டிருப்பதாக ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் நேற்றைய தினம் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,

இந்த பயங்கரவாத தாக்குதல்களின் பின்னணியில் ஓர் வெளிநாட்டு சக்தி செயற்பட்டுள்ளது என்பதனை நான் தெளிவாக கூறுகின்றேன்.

இந்த தாக்குதலின் பின்னணியில் யார் இருந்தார்கள் என்பதனை நாம் எதிர்காலத்தில் கூறுகின்றோம்.

ஈஸ்டர் தினத்தன்று ஏனைய இடங்களில் தற்கொலைதாரிகள் தாக்குதலை நடாத்திய போதிலும் தாஜ் சமுத்ராவில் குண்டு வெடிக்காமைக்குக் காரணமுண்டு எனவும் தெரிவித்துள்ளார்.

அன்றைய தினம் ஹோட்டலில் தங்கியிருந்தவர்கள் யார்? என தேடிப் பார்த்தால் அதற்கான விடை கிடைக்கும் எனவும் அவர் தெரிவிக்கிறார். குறித்த காரணத்திற்காகவே அங்கு நடாத்தப்பட வேண்டிய தாக்குதல் கைவிடப்பட்டதாக தயாசிறி மேலும் தெரிவித்துள்ளார்.

தாக்குதலை தடுப்பது தொடர்பில் ஜனாதிபதி மட்டுமா பொறுப்பு சொல்ல வேண்டும் அவர் இல்லாதபட்சத்தில் அது குறித்து தீர்மானம் எடுக்க கூடிய எவரும் இருக்கவில்லையா? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

எதிர்காலத்தில் இந்த தாக்குதலின் பின்னணியில் இருந்தது யார் என்பது தொடர்பான தகவல் தெளிவாக வெளியாகும் என்றும் தயாசிறி ஜயசேகர கூறியுள்ளார்.