காலம் வரும் போது அறிவிப்பேன்! இப்போது தான் தயாரில்லை - சமல் ராஜபக்‌ஷ

Report Print Kanmani in அரசியல்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தான் போட்டியிடுவதா? இல்லையா என்பது தொடர்பிலான அறிவிப்பை வெளியிடுவதற்கு இன்னும் காலம் உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக, சமல் ராஜபக்‌ஷ களமிறங்கவுள்ளாரென, பல்வேறு தரப்பிலும் ​அறிவிப்புகள் வெளியாகி வருகின்றமைத் தொடர்பில் அண்மையில் கருத்துத் தெரிவித்தப் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளர் குறித்த அறிவிப்பை இப்போது வெளியிட தான் தயாரில்லை என்றும், எதிர்வரும் இரண்டு வாரங்களில் இது தொடர்பில் அறிவிக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

எனினும் பல்வேறு தரப்பினரும் தன்னை ஜனாதிபதித் தேர்தலில் போட்டி​யிடுமாறு, உத்தியோகப்பூர்வமற்ற ரீதியில் ​கோரிக்கை விடுத்து வருவதாகவும், இது தொடர்பாக உத்தியோகப்பூர்வமாக அறிவித்தால், அது குறித்து ஆராய்ந்து பார்க்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.