தெரிவுக்குழு விசாரணைக்கு கோத்தபாயவும் அழைக்கப்படலாம்?

Report Print Jeslin Jeslin in அரசியல்

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவையும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக விசாரணை நடத்தும் நாடாளுமன்ற தெரிவுக்குழுவுக்கு அழைக்க முடியும் என அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

தெரிவுக்குழு விசாரணைகளில் கோத்தபாய மீதும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்ற நிலையில், கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு அமைச்சர் ராஜித வழங்கிய நேர்காணலில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும், கோத்தபாய ராஜபக்சவை தெரிவுக்குழுவிற்கு அழைக்க முடியும். அத்தோடு தெரிவுக்குழுவில் பெயர் குறிப்பிடப்படும் அனைவரும் அழைக்கப்பட வேண்டும்.

ஆனால் கோத்தபாய ராஜபக்சவை அழைக்க வேண்டுமானால் அவருக்கு எதிரான சாட்சியங்களை சேகரித்துக் கொண்டே அழைக்க முடியும்.

தெரிவுக்குழு விசாரணைகள் முன்னோக்கிச் செல்ல செல்ல யாரை அழைக்க வேண்டுமென தீர்மானிப்போம். சாட்சியங்கள் சேர்வதை வைத்தே அடுத்து யாரை அழைப்பதென்பதை தீர்மானிக்க முடியும் என அமைச்சர் ராஜித தொடர்ந்தும் குறிப்பிட்டுள்ளார்.