ஈஸ்டர் தின தாக்குதலுக்கு முன்னர் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல்! பின்னணியில் வெளிநாட்டவர்

Report Print Jeslin Jeslin in அரசியல்

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலுக்கு முன்னர் பல்வேறு பிரதேசங்களில் சில பயங்கரவாதச் செயற்பாடுகள் இடம்பெற்றன என அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

குருநாகலில் நேற்றையதினம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இங்கு அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலுக்கு முன்னர் பல்வேறு பிரதேசங்களில் சில பயங்கரவாதச் செயற்பாடுகள் இடம்பெற்றுள்ளன.

எனினும், இந்த விடயம் குறித்து பொறுப்புக்கூற வேண்டிய தரப்புக்கள் உரிய முறையில் கவனம் செலுத்தவில்லை.

நாட்டின் பயங்கரவாத செயற்பாடுகளுக்கு கூடுதலான பங்களிப்பை வெளிநாட்டவர்களே வழங்கியிருக்கின்றனர். பெருந்தொகையான பணம் வெளிநாடுகளில் இருந்து கிடைக்கப்பெற்றுள்ளன என குறிப்பிட்டுள்ளார்.