மாணவர்களுக்கு வழங்கப்படவிருந்த வசதிகள் பிற்போடப்பட்டன

Report Print Satha in அரசியல்

பாடசாலை மாணவர்களுக்கு மடி கணினிகளை வழங்கும் வேலைத்திட்டத்துக்கான அமைச்சரவை யோசனை பிற்போடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இன்று இடம்பெற்ற கூட்டத்திலேயே குறித்த ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த கூட்டம் சுமூகமாக கலந்துரையாடல்களுடன் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், மிதக்கும் மின்னுற்பத்தி நிலையம் ஒன்று தொடர்பாக அமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் கொண்டுவரப்பட்ட யோசனை ஒன்று, அமைச்சர் சாகல ரத்நாயக்கவின் எதிர்ப்பை அடுத்து பிற்போடப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.