ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரி

Report Print Steephen Steephen in அரசியல்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வேட்பாளராக போட்டியிடுவதை தடுக்க முடியாது என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரான நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

கொழும்பு டாலி வீதியில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைமையகத்தில் இன்று நடைபெறுகின்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.மேலும்,

கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 50 லட்சம் வாக்குகளை பெற்றது. ஐக்கிய தேசியக்கட்சி 36 லட்சம் வாக்குகளை பெற்றது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி 14 லட்சம் வாக்குகளை பெற்றது.

இதனால், பொதுஜன பெரமுனவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து போட்டியிட்டால் மாத்திரமே 65 இலட்சம் வாக்குகளை ஜனாதிபதித் தேர்தலில் பெற்று வெற்றி பெற முடியும். பொதுஜன பெரமுன தனித்து போட்டியிட்டால், அவர்கள் 14 இலட்சம் வாக்குகளை பெற்றுக்கொள்ள வேறு வழியை நாட வேண்டும்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் 2018 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலுக்கு அமைய நடைபெறும். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி வேட்பாளராகவும் மகிந்த ராஜபக்ச பிரதமர் வேட்பாளராகவும் போட்டியிட வேண்டும்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவார் என்பது எனது நம்பிக்கை. மைத்திரிபால சிறிசேனவுக்கு சிறுபான்மை மக்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டுள்ளார்.

வீடியோ - சினன்