ஜனாதிபதியும் பிரதமரும் சிறுப்பிள்ளை போல் நடந்துக்கொள்ளக் கூடாது - ரஞ்சன் ராமநாயக்க

Report Print Steephen Steephen in அரசியல்

ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு இடையிலான மோதல்களை முடிவுக்கு கொண்டு வந்து, இருவரும் இணைந்து பயணிக்க வேண்டும் என பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.

அலரி மாளிகையில் நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுக் கூட்டத்தின் பின்னர், செய்தியாளர்களிடம் அவர் இதனை கூறியுள்ளார்.

ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் மோதல் உலகில் எந்தநாடுகளிலும் நடப்பதில்லை. உலகில் எந்த ஜனாதிபதியும் பிரதமரும் தனித்தனியான வழிகளில் செல்ல மாட்டார்கள்.

இரண்டு பேரும் இணைந்து பயணிக்கவே 62 லட்சம் மக்கள் வாக்களித்தனர். தெரிவுக்குழுவிற்கு வருவதில்லை. அமைச்சரவைக் கூட்டத்தை நடத்துவதில்லை. இப்படியான நடவடிக்கைகள் நாட்டுக்கு நல்லதல்ல. முதலீட்டாளர்கள் வர மாட்டார்கள். இது முகத்திடம் கோபித்து கொண்டு மூக்கை வெட்டியமைக்கு ஈடானது. அனுபவமிக்க சிரேஷ்ட அரசியல்வாதிகள் என்ற வகையில் சிறுப்பிள்ளைகள் போல் நடந்துக்கொள்ளக் கூடாது.

ஜனாதிபதியும் பிரதமரும் ஐக்கியமாக இருக்க வேண்டும். நாங்கள் சிறுப்பிள்ளைகள் போல் இருக்கக்கூடாது. கோபித்துக்கொண்டு அவர் இருந்தால், நான் வர மாட்டேன் என்றும் கூறாமல், உயர் பதவிகளை வகிப்பவர்கள் ஒன்றாக வேலை செய்ய வேண்டும். தாயும், தந்தையும் சண்டையிட்டுக்கொண்டு வீட்டை கொண்டு நடத்த முடியாது எனவும் ரஞ்சன் ராமநாயக்க குறிப்பிட்டுள்ளார்.