வீட்டையும் வாகனத்தையும் சம்பந்தன் எடுத்துச் சென்றுவிட்டார்! குற்றம் சுமத்தும் மகிந்த

Report Print Jeslin Jeslin in அரசியல்

எதிர்க்கட்சி தலைவருக்கு வழங்கப்பட்ட வாகனம் மற்றும் வீட்டை முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் எடுத்துவிட்டார் என எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஷ குற்றம் சாட்டியுள்ளார்

இதன் காரணமாகவேதான் எதிர்க்கட்சி தலைவருக்கான வாகனத்தை வழங்குமாறு கோரிக்கை விடுத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் இடம்பெற்றுவரும் நாடாளுமன்ற அமர்வில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சி தலைவருக்கான வீடு, வாகனம் என்பவற்றை தமிழ் தேசிய கூட்டமைப்பினர் மீண்டும் கையளிக்கவில்லை. இந்நிலையிலேயே தான் குறித்த கோரிக்கையை விடுத்ததாக மகிந்த மேலும் தெரிவித்துள்ளார்.