கோத்தபாயவின் இரு மனுக்களை தள்ளுபடி செய்த மேன்முறையீட்டு நீதிமன்றம்

Report Print Steephen Steephen in அரசியல்

டி.ஏ.ராஜபக்ச அருங்காட்சியகம் நிர்மாணிக்கப்பட்டமை சம்பந்தமாக மூன்று நீதிபதிகள் அடங்கிய விசேட மேல் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வரும், வழக்கு தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை எதிர்ப்பு நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தாக்கல் செய்த இரண்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.

குறித்த மனுக்களை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாது, மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று அவற்றை தள்ளுபடி செய்துள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் அச்சல வெங்கப்புலி மற்றும் அர்ஜூன ஒபேசேகர ஆகியோர் முன்னிலையில் இந்த மனுக்கள் எடுத்துக் கொள்ளப்பட்டன.

இந்த மனுக்களை விசாரணைக்கு எடுக்க சட்டரீதியான முகாந்திரம் இல்லை எனக் கூறி அவற்றை நீதியரசர்கள் தள்ளுபடி செய்துள்ளனர்.