ஐ.தே.க சார்பில் நிறுத்தப்படும் ஜனாதிபதி வேட்பாளர்! ரணில் தெரிவித்துள்ள விடயம்

Report Print Steephen Steephen in அரசியல்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளர் தொடர்பாக தற்போதே பேச வேண்டாம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சந்திப்பில் கூறியுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டம் நேற்று பிற்பகல் அலரி மாளிகையில் நடைபெற்ற போதே பிரதமர் இதனை கூறியுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தல் இன்னும் அறிவிக்கப்படவில்லை என்பதால், ஜனாதிபதி வேட்பாளர் பற்றி பேசுவது பொருத்தமற்றது என பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.