அரசாங்கம் மக்களின் உண்மையான பிரச்சினைகளை மறைக்கின்றது - பந்துல குணவர்தன

Report Print Steephen Steephen in அரசியல்

காலத்திற்கு காலம் பல்வேறு தலைப்புகள் பற்றி பேசி அரசாங்கம் மக்களின் உண்மையான பிரச்சினையை மூடி மறைத்து வருகிறது என நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடந்து ஒரு மாதத்திற்கும் மேல் கடந்துள்ள நிலையில், அதற்கு கவனத்தில் கொள்ளக் கூடிய தீர்வு வழங்கப்படவில்லை.

மக்களின் பிரச்சினைகளை மறைத்து விட்டு, ஒவ்வொரு தலைப்பை களத்திற்கு கொண்டு வருகின்றனர். தேசிய பாதுகாப்பு சம்பந்தமாக எந்த நடவடிக்கைகளையும் அரசாங்கம் எடுக்கவில்லை. இதனால், தேசிய பொருளாதாரத்திற்கு பல பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. இதனை தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.