முஸ்லிம் அமைச்சர்களின் பிரச்சினையை தீர்க்கும் முன் மக்களின் பிரச்சினையை தீர்க்க வேண்டும்: ரதன தேரர்

Report Print Steephen Steephen in அரசியல்

முஸ்லிம் அமைச்சர்களின் பிரச்சினை தீர்வு காணும் முன்னர் நாட்டு மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரதன தேரர் தெரிவித்துள்ளார்.

எத்துல்கோட்டே விக்ரமசிங்க பிளேஸ் பகுதியில் அமைந்துள்ள அரசசார்பற்ற உயர் கல்வி பிரிவுக்கு இன்று விஜயம் செய்த பின்னர், செய்தியாளர்களிடம் பேசும் போதே ரதன தேரர் இதனை கூறியுள்ளார்.

பதவி விலகிய முஸ்லிம் அமைச்சர்கள் கூறுவது போல், அவர்களின் பிரச்சினைக்கு இரண்டு மாதங்களில் பதிலளிக்க எந்த தரப்பும் கடமைப்பட்டிருக்கவில்லை.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடந்து சுமார் இரண்டு மாதங்கள் ஆகின்றது. எனினும் அதில் சிக்கியவர்களுக்கு இன்னும் தீர்வு வழங்கப்படவில்லை.

தமது பிரச்சினைகளுக்கு தீர்வை தேடாமல், நாட்டிற்குள் நடந்த பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் அத்துரலியே ரதன தேரர் குறிப்பிட்டுள்ளார்.