ரிசாத்துக்கு எதிராக முறைப்பாடு செய்தவர்களுக்கு தண்டனையா?

Report Print Vethu Vethu in அரசியல்

பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியூதினுக்கு தண்டனை வழங்குவதற்கு பதிலாக அவருக்கு, எதிராக முறைப்பாடு செய்தவர்களுக்கு தண்டனை வழங்கப்படுவதாக சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கம், ரிசாத் பதியூதினுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை பொலிஸ் நிலையத்தில் தாக்கல் செய்யுமாறு கூறுகின்றது. நாங்கள் 80 சதவீத ஆதாரங்களுடன் 16 குற்றச்சாட்டுகளை பொலிஸ் நிலையத்தில் தாக்கல் செய்தோம்.

அங்கு ரிசாத் பதியூதினின் குடும்பத்தினர் 3000 ஏக்கருக்கும் அதிகமான காணியை மன்னாரில் கைப்பற்ற பயன்படுத்திய உரிம பத்திரம் 68 பிரதிகளும் பொலிஸாரிடம் வழங்கியுள்ளோம். அந்த ஆவணங்களை கண்டுபிடிக்க நாங்கள் ஒரு வாரம் கஷ்டப்பட்டோம்.

அதன் பின்னர் நாங்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தால், மீண்டும் புத்தம் ஒன்றை எடுத்துக்கொண்டு 3 மணித்தியாலங்கள் எங்களிடமே வாக்குமூலம் பதிவு செய்து கொள்கின்றனர். மீண்டும் குற்ற விசாரணை திணைக்களத்திற்கு சென்று வாக்குமூலம் வழங்க வேண்டும்.

ஒரு முறைப்பாடு செய்ய சென்றால் மூன்று முறை சிரமப்பட நேரிட்டுள்ளது. இதனால் எங்களுக்கு நியாமான சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இந்த அரசாங்கம் குற்றவாளிகளை தண்டிக்கின்றதா அல்லது முறைப்பாட்டாளர்களை தண்டிக்கின்றதா என சந்தேகம் எழுந்துள்ளதாக உதய கம்பன்பில மேலும் தெரிவித்துள்ளார்.